ஜனவரி 9 2013 கல்வி மேம்பாட்டு ஆசிரியர் சங்க பொதுக்குழு கூட்டம் காடம்பாடி பள்ளியில் மாலை கூடியது. 24 ஆசிரியர்கள் கலந்துக் கொண்டார்கள்.
மூன்று தலைப்புகளில் விவாதிக்கப்பட்டது.
1. கற்றலை கற்பித்தலை எளிமையாக்குதல்
2. ஆசிரியர்கள் திறன்களை வளர்த்துக்கொள்ளுதல்
3. மாணவர்கள் திறன்களை வெளிக்கொணர்தல்
தலைப்பு 1 கீழ் விவாதிக்கப்பட்டதில்
· க.மே. ஆ.ச சார்பில் வழங்கப்படும் நோட்டுகள் கையெழுத்து பயிற்சி கலர் பென்சில் ஆகியவற்றை நிறுத்திக்கொள்ளலாம் ( அரசு வழங்கிக் கொண்டிருக்கிறது)
· அரசு அட்லஸ் வழங்க இருப்பதால் மாணவர்களுக்கு கற்பிக்க கரும்பலகையில் மாட்டுவதற்கு ஏதுவாக பெரிய மேப் வழங்கலாம்.
· சாக் பீஸ் பெட்டிகள் வண்ண சாக் பீஸ் பெட்டிகள் வழங்கலாம்
· முதலுதவி பெட்டிக்கான பொருட்கள் வழங்கலாம்.
· சானிடரி பொருட்கள் மற்றும் விளையாட்டுப் பொருட்கள்
தலைப்பு 2 கீழ் விவாதிக்கப்பட்டதில்
· யோகா பயிற்சி சிக்கலுக்கு பதிலாககாடம்பாடி பள்ளியில் நடத்தினால் ஆசிரியர்கள் கலந்துக் கொள்வார்கள்.
· கணிணி பயிற்சி வகுப்பு
· தமிழ் மன்றம் அறிவியல் மன்றம் உபயோகமாக உள்ளது.
தலைப்பு3 கீழ் விவாதிக்கப்பட்டதில்
· மாணவர்களுக்கு கூச்ச சுபாவம் அதிகமுள்ளது . நீக்க வழி?
· போட்டிகள் சுழற்சி முறையில் நடத்தப்படலாம். வாரம் ஒரு போட்டி அனைத்து மாணவர்களும் கலந்துக்கொள்ளும் வகையில் நடத்தி பரிசளிக்க வேண்டும்
No comments:
Post a Comment