நிறுவனர்

நிறுவனர்
திரு. நாகை. வி.மோகன்

சங்க நிகழ்வுகள்

Tuesday, 11 October 2011

இதழ் கட்டுரை எழுதுதல்(JOURNAL WRITING)

       மாணவர்கள்  அவர்கள் விரும்பியதை எழுத ஓவியமாக வரைய இதழ் கட்டுரை எழுதுதல்(JOURNAL WRITING)  என்ற பழக்கத்தை ஏற்படுத்த மாணவர்களுக்கு நோட்டு கலர் பென்சில்கள் க்ரயான்ஸ் மற்றும் ஷார்பனர்கள் வழங்கப்பட்டது 

RE: first aid box

Thanks for the pictures, Bala. The box looks good.

I hope all the boxes get distributed before the rains come.

-----Original Message-----
From: kalvi membattu sangam nagapattinam [mailto:kmasnagai@gmail.com]
Sent: Tuesday, October 11, 2011 6:48 AM
To: kmasnagai.balanagai@blogger.com; VJ Mohan
Subject: first aid box

journal for students

JOURNAL FOR STUDENTS

முதல் உதவி பெட்டி

முதல் உதவி பொருட்கள் வைப்பதற்கு ஏதுவாக முதல் உதவி பெட்டி 23 பள்ளிகளுக்கு வழங்கப்பட்டது 

first aid box

Monday, 3 October 2011

அறிவியல் மன்றம் -28-09.2011

கல்வி மேம்பாட்டு ஆசிரியர் சங்கத்தின் அறிவியல் மன்றம் -28-09.2011 அன்று காடம்பாடி பள்ளியில் நடைபெற்றது . குருக்கத்தி ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் விரிவுரையாளர் திரு. காமராஜ் அவர்கள் அறிவியல் கற்பித்தல் என்ற தலைப்பில் பேசினார்கள். திரு. சச்சிதானந்தம் அவர்கள் சந்தேகங்களுக்கு பதிலளித்தார்கள் .

Sunday, 2 October 2011

கல்வி மேம்பாட்டு ஆசிரியர் சங்க நல்லாசிரியர் குறிக்கோள்கள்


கல்வி மேம்பாட்டு ஆசிரியர் சங்க
நல்லாசிரியர் குறிக்கோள்கள்
5 செப்டம்பர் 2011

1.        ஆசிரியரான என் முதற்கடமை என் மாணவர்களின் முன்னிருந்து அவர்களுக்குக் கல்வி பயிற்றுவதே என்பதை எப்போதும் என் மனத்தில் நிறுத்திச் செயல்படுவேன்.
2.        மனிதருக்குள் இயற்கையாகவே உள்ளிருக்கும் ஆற்றலை வெளிப்படுத்துவதே கல்வி என்பதை என் கருத்தில் நிறுத்தி அக்குழந்தைகளை மையமாக வைத்து அவர்களின் அறிவையும் ஆற்றலையும் வளர்ப்பேன்.
3.        என் வகுப்பை நான் அன்பும் இனிமையும் உற்சாகமும் நிறைந்த சுமுகமான நிலையில் வைத்திருப்பேன்.
4.        என் மாணவர்களிடம் மன ஒருமைப்படுத்தும் திறனையும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனையும் வளர்ப்பேன்.  செய்யும் செயல்களை முழு ஈடுபாட்டுடனும் மன ஓர்மையுடனும் செய்யப் பயிற்றுவிப்பேன்.
5.        மாணவரின் நன்னோக்கு, நல்ல குணங்கள், நற்பண்புகள், மற்றும் நல்ல பழக்கங்களை அடையாளம் கண்டு, அவற்றை ஊக்குவித்து, அவர்கள் முறையான, ஒழுக்கமான நடத்தையுள்ளவர்களாக வளர என் பள்ளியிலும் வகுப்பிலும் வாய்ப்புகளையும் பயிற்சிகளையும் ஏற்படுத்துவேன்.
6.        பாடக் கருத்துக்களைச் சிறுவர்களுக்குப் புரியும்படி எளிதாக்கி அவற்றைக் கற்றுக் கொள்வதை அவர்களுக்குப் பிடித்தமாகும் வகையில் கற்பிப்பேன்.
7.        மாணவர்கள் ஏட்டில் கற்றதை அவர்களின் அன்றாட வாழ்க்கையுடன் இணைத்தும், செய்முறைப் பயிற்சிகள் மூலமும் அனுபவபூர்வமாகப் புரியச் செய்வேன்.
8.        என் மாணவர்கள் தம்மையும் தம்மைச் சூழ்ந்த இயற்கையையும் அறிவியல் மூலம் அறியச் செய்வேன்.  தாமும் இயற்கையின் ஒரு பகுதியே என்பதை உணர்ந்து அதனுடன் இயைந்து வாழக் கற்பிப்பேன்.
9.        என் மாணவர்கள் நாம் சார்ந்து வாழும் சமுதாயத்தை அறிந்து புரிந்து அதனுடன் இயைந்து வாழக் கற்பிப்பேன்.
10.     என் மாணவர்களிடம் படிப்பதில் ஆர்வத்தையும், தெரியாத ஒன்றைத் தெரிந்துகொள்வதில் நாட்டத்தையும், ஆழ்ந்து சிந்திக்கும் திறனையும் வளர்ப்பேன்.
11.     என் மாணவர்களின் முழுமையான, அதாவது உடல், அறிவு, மற்றும் உள்ள நலத்திற்காகவும் வலிமைக்காகவும் வளர்ச்சிக்காகவும் பயிற்சியளிப்பேன்.
12.     என் மாணவர்களை வெறும் படிப்பாளிகளாக மட்டுமில்லாமல் படைப்பாற்றல் மிக்கவர்களாக வளர்வதற்குப் பயிற்சியளிப்பேன்.
13.     நான் அனைத்து மாணவர்களுக்கும் சமவாய்ப்பு அளிப்பேன்.  மாணவர்களிடம் சமத்துவ மனப்பாங்கை வளர்த்து, ஒருவருடன் ஒருவர் சகோதரத்துவத்துடன் பழகப் பயிற்றுவிப்பேன்.
14.     ஆசிரியராகிய நான் என் மாணவர்களை மனதில் கொண்டு எப்பொழுதும் என்னை அறிவிலும் திறன்களிலும் நற்பண்புகளிலும் வளர்த்துக் கொண்டே இருப்பேன்.

----------------ooOoo----------------
குறிக்கொள்களுக்கான செயல்முறைகள்
1.        ஆசிரியரான என் முதற்கடமை என் மாணவர்களின் முன்னிருந்து அவர்களுக்குக் கல்வி பயிற்றுவதே என்பதை எப்போதும் என் மனதில் நிறுத்திச் செயல்படுவேன்.
               1.1.            பள்ளி நேரத்தில் வெளிவேலைகளையோ அலுவலக வேலைகளையோ செய்வதை முடிந்த மட்டும் தவிர்த்து வகுப்பில் என் மாணவர்களுக்குப் பாடம் சொல்லித் தரவே முயலுவேன்.
               1.2.            என் அனைத்து பொறுப்புகளையும் கருத்தில் கொண்டு என் காலத்தைத்  திட்டமிட்டுச் செலவழிப்பேன்.
               1.3.            சொல்லித் தரப்போகும் பாடத்திற்காக முன்கூட்டியே நல்ல முறையில் தயார் செய்து வருவேன்.
               1.4.            ஒவ்வொரு நாளும் பள்ளி நேரம் முழுவதிலும் என் மாணவர்கள் பொழுதை வீணடிக்காமல் பயனுள்ள முறையில் செலவழிக்கத் திட்டமிட்டுச் செயல்படுவேன்.

2.        மனிதருக்குள் இயற்கையாகவே உள்ளிருக்கும் ஆற்றலை வெளிப்படுத்துவதே கல்வி என்பதை என் கருத்தில் நிறுத்தி அக்குழந்தைகளை மையமாக வைத்து அவர்களின் அறிவையும் ஆற்றலையும் வளர்ப்பேன்.
               2.1.            என் வகுப்பில் உள்ள ஒவ்வொரு மாணவனின் தனித்திறன்களைக் கண்டறிந்து அவற்றை வெளிப்படுத்தி ஊக்குவித்து வளர்க்க என்னால் முடிந்த வரை உதவுவேன்.
               2.2.            பாடத்திட்டத்தை ஒரு வழிகாட்டியாக மட்டுமே கொண்டு குழந்தைகளின் புரிதல் எங்குள்ளது என்று தெரிந்துகொண்டு கற்றுக்கொடுக்கும் கருத்துக்களை அவர்களுக்கு விளக்குவேன்.
               2.3.            மாணவர்களைத் தெரிந்ததிலிருந்து தெரியாததற்கும், புரிந்ததிலிருந்து புரியாததற்கும், எளிதிலிருந்து கடினமானததற்கும் கூட்டிச் செல்வேன்.
               2.4.            புதிய ஒன்றைச் சொல்லிக்கொடுக்குமுன் மாணவர்களுக்கு அதைப்பற்றி முன்னமேயே தெரிந்ததைப் பகிர்ந்துகொள்ளச் செய்வேன்.
               2.5.            சொல்லிக்கொடுக்கும் கருத்துடன் மாணவர்களின் தனித்திறன்களை இணைக்க முயல்வேன்.
               2.6.            மாணவர்கள் தங்கள் கருத்துக்களையும், உணர்வுகளையும், ஆற்றல்களையும் பயமோ கூச்சமோ இன்றி வகுப்புடன் பகிர்ந்து கொள்ள வாய்ப்பளித்து உற்சாகப்படுத்துவேன்.
               2.7.            என் மாணவர் ஒருவர் குருவுக்கு மிஞ்சிய சீடன் என்பது போல் அறிவிலோ அல்லது ஓர் ஆற்றலிலோ என்னை விட மிகுந்திருந்தால் அதைப் போற்றி அந்த மாணவர் மேலும் வளர வாய்ப்புகள் அளிப்பேன்.
               2.8.            என் மாணவர்களின் தன்னம்பிக்கையையும், ஆளுமையையும், சுய வளர்ச்சியில் ஆர்வத்தையும் பற்பல வழிகளில் வளர்ப்பேன்.



3.        என் வகுப்பை நான் அன்பும் இனிமையும் உற்சாகமும் நிறைந்த சுமுகமான நிலையில் வைத்திருப்பேன்.
               3.1.            ஒரு வீட்டின் நல்ல தாய் தன் மகவுகளை வழி நடத்துதல்போல் என் வகுப்பில் உள்ள மாணவர்களை ஒரு தாயின் நிலையில் இருந்து வளர்ப்பேன்.
               3.2.            கோபம், கண்டிப்பு, தண்டிப்பு போன்றவற்றை முன்னிருத்துவதால் மாணவர்களிடம் கற்றுக்கொள்வதிலும் வகுப்புநடப்புகளில் பங்கு கொள்வதிலும் ஆர்வம் குறைந்துவிடும் என்பதால் அப்படிப்பட்ட இன்னாத உணர்வுகளை முடிந்தவரை தவிர்ப்பேன்.
               3.3.            ஒருசில வேளைகளில் கண்டிப்போடு இருக்க வேண்டியிருக்கும்போதோ அல்லது தண்டனை தரவேண்டியிருக்கும்போதோ, பிரச்சினை தீர்ந்த உடனேயே வகுப்பை மீண்டும் சுமுகநிலைக்குக் கொண்டுவருவேன்.
               3.4.            என் சொந்தப் பிரச்சினைகளை வகுப்புக்கு வெளியேயே விட்டுவிட்டு வகுப்பை ஈடுபாட்டுடனும் உற்சாகத்துடனும் நடத்துவேன்.
               3.5.            வகுப்பிற்குள் மட்டுமின்றி வெளியேயும் அதே அன்பும் இனிமையும் உற்சாகமும் கலந்த உணர்வுடன் இருக்க முயல்வேன்.
               3.6.            ஒரு மாணவர் கற்றலில் பின் தங்கி இருக்கப் பல காரணங்கள் இருக்கலாம்: உடல் அல்லது உள்ளக் குறைபாடுகள், (சத்துக்குறைவு, உறுப்புக் குறைபாடுகள், போதிய வளர்ச்சி இன்மை போன்றவை), குடும்ப மற்றும் சுற்றுச்சுழல் பிரச்சினைகள் முதலிய பல காரணங்கள். எனவே, என் மாணவர் ஒவ்வொருவரின் பின்புலத்தையும் அறிந்து, அதிலிருந்து அவரையும் அவரின் நடத்தைகளையும் புரிந்து அவருக்கு வழிகாட்டுவேன்.

4.        என் மாணவர்களிடம் மன ஒருமைப்படுத்தும் திறனை வளர்ப்பேன்.  செய்யும் செயல்களை முழு ஈடுபாட்டுடனும் மன ஓர்மையுடனும் செய்யப் பயிற்றுவிப்பேன்.
               4.1.            என் மாணவர்களுக்கு முன் மாதிரியாக நானும் என் செயல்களை முழு ஈடுபாட்டுடனும் மன ஓர்மையுடனும் செய்வேன்.
               4.2.            என் பள்ளி மற்றும் வகுப்பின் தினசரி கால அட்டவணைகளில் தியானத்திற்காக நேரம் ஒதுக்கி என் மாணவர்களுக்குப் பயிற்சியளிப்பேன்.
               4.3.            ஒரு சமயத்தில் ஒரு வேலையை மட்டுமே செய்வது, தேவையற்ற பேச்சு மற்றும் குறுக்கீடுகளைத்  தவிர்ப்பது போன்ற பழக்கங்களின் மூலம் எந்த வேலையைச் செய்யும்பொழுதும் அதில் மனம் ஆழ்ந்து செயல்பட வாய்ப்பு அளிப்பேன்.
               4.4.            எளிதான மூச்சுப் பயிற்சிகள், உடல் பயிற்சிகள், விளையாட்டுகள்  மூலம் மாணவர்களை நாள் முழுதும் சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் வைத்திருப்பேன்.

5.        மாணவரின் நன்னோக்கு, நல்ல குணங்கள், நற்பண்புகள், மற்றும் நல்ல பழக்கங்களை அடையாளம் கண்டு, அவற்றை ஊக்குவித்து, அவர்கள் முறையான, ஒழுக்கமான நடத்தையுள்ளவர்களாக வளர என் பள்ளியிலும் வகுப்பிலும் வாய்ப்புகளையும் பயிற்சிகளையும் ஏற்படுத்துவேன்.
                           5.1.            வகுப்பு நடப்பில் ஓர் ஒழுங்குமுறை ஏற்படுத்தி, அதை மாணவர்களுக்கு விளக்கிச் சொல்லி, அதைக் கடைப்பிடிக்கும் பழக்கத்தை அவர்களிடம் ஏற்படுத்துவேன்.
                           5.2.            ஆசிரியர் பேசும்பொழுது தான் பேசாமல் கவனிப்பது, பேசுமுன் கை தூக்கி ஆசிரியரின் அனுமதி பெற்று பிறகே பேசுவது, தன் முறை வரும்வரை பொறுமையாக காத்திருப்பது, மற்றவர் பேசிக் கொண்டிருக்கும் போது அனாவசியமாகக் குறுக்கிடாதிருப்பது போன்ற ஒழுக்கமுறைகளை என் மாணவர்களுக்குச் சிறு வயதிலிருந்தே பயிற்றுவேன்.
                           5.3.            ஒரு மாணவன் நல்லொழுக்கத்துடன் நடக்கும் பொழுது அதைப் எல்லோருக்கும் முன் பாராட்டி அந்த மாதிரி நடத்தையை ஊக்குவிப்பேன்.
                           5.4.            அவ்வப்போது அவர்களுக்கு கதைகள், பாட்டுகள், நல்லோர் வரலாறு, மற்றும் அறிவுரைகள் மூலம் நல்வழியைப் போதிப்பேன்.
                           5.5.            மாணவர்கள் நாம் சொல்வதைக் கேட்டு நடப்பதை விட நாம் எப்படி நடக்கிறோம் என்று பார்த்தே தாமும் அப்படி நடப்பார்களாதலால் நான் என் மாணவர்களுக்கு ஒரு முன் மாதிரியாக நடந்து கொள்வேன்.

6.        பாடக் கருத்துக்களைச் சிறுவர்களுக்குப் புரியும்படி எளிதாக்கி அவற்றைக் கற்றுக் கொள்வதை அவர்களுக்குப் பிடித்தமாகும் வகையில் கற்பிப்பேன்.
6.1.      பாடத்திலுள்ள ஒவ்வொரு கருத்தையும் மாணவர்களுக்கு நன்கு புரிய வைக்க அதற்க்கேற்ற TLM போன்ற பல யுக்திகளைக் கையாளுவேன்.
6.2.      பன்முக அறிவாற்றல்கள் வழியாக அக்கருத்தை மாணவர்கள் புரிந்து கொள்ளும்படிச் செய்வேன்.
6.3.      முதலில் பாடக் கருத்தை ஒட்டிய அவர்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள செய்வேன்.
6.4.      முடிந்த வரை கருத்தை அவர்களின் வாழ்க்கையோடு இணைத்து விளக்குவேன்.
6.5.      நேர்முக வர்ணனை, கதைகள், நகைச்சுவை, படங்கள் முதலியவை மூலம் சொல்லிக்கொடுக்கும் கருத்தில் மாணவர்களின் ஈடுபாட்டை வளர்ப்பேன்.

7.        மாணவர்கள் ஏட்டில் கற்றதை அவர்களின் அன்றாட வாழ்க்கையுடன் இணைத்தும், செய்முறைப் பயிற்சிகள் மூலமும் அனுபவ பூர்வமாகப் புரியச் செய்வேன்.
7.1.      மாணவர்களின் வீடுகளில் அன்றாடம் நடைபெறும் வரவு செலவு கணக்கு, பால் கணக்கு, தவணை வட்டி, வங்கி கணக்கு, வீட்டு அளவெடுப்பு, தெரு மக்கள் கணக்கெடுப்பு முதலியவற்றின் மூலம் அவர்களின் ஏட்டுக்கணித அறிவை பயனுள்ள நடைமுறை அறிவாக்குவேன்.
7.2.      அறிவியல் கருத்துக்களைச் செய்முறை பயிற்சிகள் மூலம் மாணவர்கள் மனத்தில் நன்கு பதியச்செய்வேன்.
7.3.      அமாவாசை, பௌர்ணமி, கிரகணம் போன்ற நாட்களில் அந்த மாதிரி இயற்கை நிகழ்வுகள் எப்படி நேர்கின்றன என்பதைப் புரிந்துகொள்ளச் செய்வேன்.  அதேபோல் பருவங்கள் மாறும்போது அந்த மாற்றங்களின் இயற்கைக் காரணங்களை விளக்குவேன்.
7.4.      வீட்டில் தோட்டம் போடுவதை ஊக்குவித்து அதன் மூலம் அவர்களுக்குத் தாவரங்களைப் பற்றியும் மற்ற உயிரினங்கள் அனைத்தும் தாவரங்களைச் சார்ந்தே வாழ்வதையும் பற்றியும் புரியச் செய்வேன்.
7.5.      சமூகவியலில் படிப்பதை நம்மைச் சுற்றியுள்ள இன்றைய சமூக நிலை, ஊராட்சி அமைப்பு, அரசு நிறுவனங்கள் போன்றவற்றோடு இணைத்து அவர்களின் உலகப் புரிதலைப் பலப்படுத்துவேன்.
7.6.      இம்மாதிரி படிக்கும் ஒவ்வொரு பாடவியலையும் வெறும் ஏட்டுப்படிப்பாக இல்லாமல் நம் உலகத்தையும் அதில் நம் வாழ்க்கையையும் மேம்படுத்த ஒரு வழியாகக் காட்டுவேன்.


8.        என் மாணவர்கள் தம்மையும் தம்மைச் சூழ்ந்த இயற்கையையும் அறிவியல் மூலம் அறியச் செய்வேன்.  தாமும் இயற்கையின் ஒரு பகுதியே என்பதை உணர்ந்து அதனுடன் இயைந்து வாழக் கற்பிப்பேன். 
8.1.      இயற்கையை உள்ளபடி புரிந்து கொள்வதற்கான திறவுகோல் அறிவியலே, வெறும் பழைய நம்பிக்கைகள் அல்ல, என்பதை அறிவியல் வரலாறு மூலம் என் மாணவர்களைப் புரிந்து கொள்ளச் செய்வேன்.
8.2.      தினசரி வாழ்க்கையிலும் சிறுசிறு விஷயங்களில் கூட அறிவியல் அடிப்படையில் செயல்படுவதின் முக்கியத்துவத்தையும் பயனையும் புரியச் செய்வேன்.
8.3.      அறிவியல் வழிமுறையில் செய்முறை சோதனைகளின் முக்கியத்துவத்தையும்
சக ஆராய்ச்சியாளர்களுடன் சேர்ந்து செயல்பட வேண்டியதின் அவசியத்தையும் வலியுறுத்துவேன்.
8.4.      நம் ஊர், மாவட்டம், மற்றும் மாநிலத்தின் இயற்கை அமைப்பு மற்றும் வளத்தை அறிந்து அவை நம் தினசரி வாழ்க்கையில் எவ்விதமான தாக்கங்களை எப்படி ஏற்படுத்துகின்றன என்பதைப் புரிந்துகொள்ளச் செய்வேன்.
8.5.      ஆறு, கடல், வயல்வெளி, பூந்தோட்டம், தோப்பு, காடு, மலை, வானம், நிலா, நட்சத்திரங்கள், சூரியோதயம், சூரிய அஸ்தமனம் போன்றவற்றின் இயற்கை அழகை மாணவர்களுடன் சேர்ந்து ரசித்துப் போற்றுவேன்.
8.6.      பறவைகள் மற்றும் பலவித விலங்குகளின் அழகையும் ஆற்றல்களையும் மாணவர்களுடன் சேர்ந்து கண்டறிந்து வியப்பேன்.
8.7.      தாவரங்கள், பறவைகள், மற்றும் விலங்குகளை உற்று கவனித்து, அவைகளின் வரைபடம் வரைந்து, அவற்றைத் துல்லியமாக வர்ணிக்கப் பயிற்சி அளிப்பேன்.
8.8.      இவ்வுலகில் நாமும் மற்றும் அனைத்து உயிரினங்களும் இயற்கையைச் சார்ந்தே வாழ்வதால் அதைப் பாதுகாப்பதும் வளப்படுத்துவதும் நம் ஒவ்வொருவரின் கடமை என்பதை உணரச்செய்வேன்.
8.9.      மனித நல்வாழ்விற்கு மரங்கள் அத்தியாவசியமாதலால் மரங்களை நடுவதும், நட்ட மரங்களுக்குத் தண்ணீர் விட்டு அவற்றைப் பராமரிப்பதும் நம் ஒவ்வொருவரின் கடமை என்பதை உணர்ந்து செயல்பட பயிற்றுவேன்.
8.10.   நெகிழிக் (பிலாஸ்டிக்கு) கோப்பை, பை, பாலியஸ்டர் துணி போன்ற இயற்சிதைவுத் திறனற்றப் பொருட்களை உபயோகப்படுத்துவதால் மனித வாழ்வில் ஏற்படக்கூடிய விளைவுகளை விளக்கி அவற்றைத் தவிர்ப்பதை ஊக்குவிப்பேன்.

9.        என் மாணவர்கள் நாம் சார்ந்து வாழும் சமுதாயத்தை அறிந்து புரிந்து அதனுடன் இயைந்து வாழக் கற்பிப்பேன். 
9.1.      நாம் இருக்கும் ஊரின் வரலாறு, ஊர் அமைப்பு, வளங்கள் போன்றவற்றை அறியச் செய்வேன்.
9.2.      களப்பயணங்கள் மூலம் அவர்கள் நம் ஊரைப் பற்றியும், நம் ஊரிலுள்ள நிறுவனங்களைப் பற்றியும், நம் சமூக அமைப்பைப் பற்றியும் தெரிந்து கொள்ளச் செய்வேன்.
9.3.      நாகையில் பிறந்த மறைமலையடிகள், வேதாரண்யத்தில் பிறந்த தாயுமானவர், மாயவரத்தில் பிறந்த சாமுவேல் வேதநாயகம் பிள்ளை போன்ற நம் ஊரிலோ மாவட்டத்திலோ பிறந்த சாதனையாளர்களைப் பற்றிச் சொல்லி நாம் வாழும் இடத்தைப் பற்றி அவர்களைப் பெருமிதமடையச் செய்வேன்.
9.4.      தம் ஊரின் மேலிருக்கும் பற்றை ஆதாரமாகக் கொண்டே தேசப்பற்று வளரும் என்பதால் என் மாணவர்களிடம் அவர்களின் ஊரின் மேல் பற்றை வளர்ப்பேன்.  அவர்களின் இன்றைய நிலைக்கும் வளர்ச்சிக்கும் இருக்கும் ஊரின் மற்றும் ஊர் மக்களின் முக்கியத்துவத்தை உணரச்செய்து அதற்குக் கைமாறாக எதிர்காலத்தில் ஊர் வளர்ச்சிக்குத் தாம் உதவவேண்டும் என்ற நோக்கை அவர்களிடம் வளர்ப்பேன்.
9.5.      நம் மொழியே நமது பண்பாட்டின் ஊடகமானதால் தமிழ்த் திறனையும் தாய்மொழிப் பற்றையும் இளவயதிலிருந்தே என் மாணவர்களிடம் வளர்ப்பேன்.  தமிழை விடுத்து ஆங்கிலத்தில் பேசுவதுதான் உயர்வு என்னும் தீய எண்ணத்தை அறவே அகற்றுவேன்.
9.6.      சமுதாயப் போக்குகளில் சிலவற்றை மாற்றவும் வேண்டியிருக்கும் என்பதை உணரச் செய்து, மனு எழுதுதல், அதிகாரிகளிடம் கோரிக்கைவைத்தல், தேர்தலில் வேறு வேட்பாளரைத் தேர்ந்தெடுத்தல், இருக்கும் சட்டத்தை அமல்படுத்தச் செய்தல், புதுச்சட்டங்களை இயற்றக்கோரல் போன்ற மாற்றத்திற்கான வழிகளையும் தெரிந்துகொள்ளச் செய்வேன்.
9.7.      தம் வீடு, தெரு, வகுப்பு, பள்ளி, பள்ளியின் சுற்றுப்புறம் முதலியவற்றைச் சுத்தமாக வைத்திருப்பது, வேண்டும்போது அவற்றைச் சுத்தம் செய்வது, மரங்கள் நடுவது, இருக்கும் மரங்களைப் பராமரிப்பது, பிலாஸ்டிக்கைத் தவிர்ப்பது போன்ற தங்களால் முடிந்த செயல்களால் மாணவர்கள் தம்மைச் சுற்றிச் சிறுசிறு மாற்றங்களை ஏற்படுத்துவதை ஊக்குவிப்பேன்.

10.     என் மாணவர்களிடம் படிப்பதில் ஆர்வத்தையும், தெரியாத ஒன்றைத் தெரிந்துகொள்வதில் நாட்டத்தையும், ஆழ்ந்து சிந்திக்கும் திறனையும் வளர்ப்பேன்.
10.1.   என் மாணவர்களிடம் நூலகப் பழக்கத்தை வளர்ப்பேன்.  பக்கத்தில் உள்ள நூலகத்தை அறிந்து அதை எப்படிப் பயன் படுத்துவது என்று அவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பேன்.  மாணவர்களின் திறனுக்கும் ஆர்வத்திற்கும் ஏற்ப அவர்களுக்கு புத்தகங்களைப் பரிந்துரைப்பேன்.
10.2.   முடிந்தால் வகுப்பிலேயோ அல்லது பள்ளிக்குள்ளேயோ ஒரு சிறிய நூலகம் அமைத்துப் பராமரிப்பேன்.
10.3.   பாடத்திட்டத்திற்கு வெளியே உள்ள புத்தகங்களைத் தாமே படித்தறியவும் படித்து மகிழவும் ஊக்குவிப்பேன். வகுப்பிலேயே அவர்களுக்கு விருப்பமான புத்தகம் ஒன்றைப் படிக்க நேரம் ஒதுக்கி அவர்களின் படிக்கும் பழக்கத்தை வளர்ப்பேன்.
10.4.   மனத்திற்குள்ளேயே படிக்கும் திறனையும் படித்ததை வகுப்பில் பகிர்ந்து கொள்ளும் ஆற்றலையும் வளர்ப்பேன்.
10.5.   ஏன், எதற்கு, எப்படி என்று கேட்டு வெவ்வேறு கருத்துக்களைப் பற்றி ஆராய்ந்து கட்டுரைகள் எழுதவும், வகுப்பில் பகிர்ந்துகொள்ளவும் பயிற்றுவிப்பேன்.
10.6.   தனக்குத் தெரியாத ஒன்றைத் தெரிந்துகொள்வதிலும் புரியாத ஒன்றைப் புரிந்துகொள்வதிலும் கிடைக்கும் ஒரு தனி வகையான மகிழ்ச்சியை உணர அவர்களுக்குப் பற்பல வாய்ப்புகளை ஏற்படுத்துவேன்.
10.7.   புதிர்கள் விடுகதைகள் மூலம் அவர்களைச் சிந்திக்கத் தூண்டுவேன்.

11.     என் மாணவர்களின் முழுமையான, அதாவது உடல், அறிவு, மற்றும் உள்ள நலத்திற்காகவும் வலிமைக்காகவும் வளர்ச்சிக்காகவும் பயிற்சியளிப்பேன்.
11.1.   மாணவர்களுக்குத் தன் உடல் நலத்திற்கு உடல் சுத்தம், சுற்றுப்புற சுத்தம் இவற்றின் முக்கியத்துவத்தை உணரச் செய்து நல்ல சுகாதாரப் பழக்கங்களை அவர்களிடம் வளர்ப்பேன்.
11.2.   அவர்களின் உடல் வலிமைக்காக உடற்பயிற்சி, யோகாசனப் பயிற்சி முதலியவற்றை அளிப்பேன்.  அவர்கள் தினம் ஓடியாடி விளையாட நேரம் ஒதுக்குவேன்.  கபடி, கோகோ, வளைப்பந்து (ring ball) போன்ற விளையாட்டுகளின் விதிமுறைகளைச் சொல்லிக் கொடுத்து அவர்களின் விளையாட்டுத் திறமையை வளர்ப்பேன்.
11.3.   அவர்கள் ஏட்டில் படிக்கும் அல்லது ஒருவர் சொல்லிக் கேட்கும் எதையும் பகுத்தறிவுடன் ஆராய்ந்த பின்னரே அது மெய்யா அல்லவா என்று முடிவு செய்யப் பயிற்சி தருவேன்.
11.4.   ஒரு வினாவுக்கு ஒரே விடைதான் என்ற எண்ணத்தை விடுத்து, சில வினாக்களுக்குப் பல விடைகளை ஏற்றுக் கொள்வேன்; சிலவற்றிக்கு விடை கிடையாது, கிடைக்க முடியாது என்றும் புரிந்து என் மாணவர்களுக்கும் புரியவைப்பேன்.
11.5.   அவர்களின் தானாக சிந்திக்கும் திறனை வளர்க்க பயிற்சிகள் அளிப்பேன்.  தன் தனித்தன்மையை வெளிப்படுத்தும் துணிவை அவர்களிடம் வளர்ப்பேன்.
11.6.   பாட்டு, நடனம், நாடகம் போன்றவற்றில் அவர்களுக்குப் பயிற்சி அளித்து அவர்களின் உள்ள நலனையும் புறவினைத் திறன்களையும் வளர்ப்பேன்.
11.7.   வாழ்க்கையின் உயர் இன்பங்களை அவர்களுக்கு அறிமுகப்படுத்தவும் அவர்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்வதில் உற்சாகத்தை ஏற்படுத்தவும் அவர்களை அவ்வப்போது ஊரில் நடக்கும் கலை நிகழ்ச்சிகளுக்கும், பேச்சு மற்றும் கவிதை அரங்கங்களுக்கும், கண்காட்சிகளுக்கும் அழைத்துச் செல்வேன்.
11.8.   சாதனை புரிந்த அறிஞர்கள், சிந்தனையாளர்கள், படைப்பாளிகள், கலைஞர்கள், சமூகத்தொண்டர்கள், தலைவர்கள் போன்றோரின் வாழ்க்கை வரலாறு, நீதிக்கதைகள் போன்றவை மூலம் அவர்களின் எண்ணங்களையும் லட்சியங்களையும் உயர்த்துவேன்.

12.     என் மாணவர்களை வெறும் படிப்பாளிகளாக மட்டுமில்லாமல் படைப்பாற்றல் மிக்கவர்களாக வளர்வதற்குப் பயிற்சியளிப்பேன்.
12.1.   என் மாணவர்களை வெறும் அறிவு நுகர்வோர்களாக மட்டுமல்லாமல், அறிவுப் படைப்பாளிகளாகவும் வளர்ப்பேன்.  மாணவர்கள் தங்கள் ஆற்றல்களைத் தங்கள் படைப்புகள் மூலம் வெளிப்படுத்த அதற்கென நேரம் ஒதுக்கிப் பயிற்சி அளிப்பேன்.
12.2.   தம் மனத்தில் உருவாகும் கருத்துக்களையும் உணர்வுகளையும் அடையாளம் கண்டு அவற்றைத் தம் படைப்புகள் மூலம் துணிவுடன் வெளிப்படுத்த அவர்களுக்குப் பயிற்றுவேன்.
12.3.   சீனக்களிமண், காகிதம், காய்கறிகள் போன்றவற்றால் உருவங்கள் செய்வது, வீணாகும் பொருட்களை வைத்து அழகுப் பொருட்கள் செய்வது போன்ற கைவினைத் திறன்கள் மூலம் அவர்கள் தன் படைப்புத் திறனை வெளிப்படுத்தவும் வளர்த்துக்கொள்ளவும் வாய்ப்பளிப்பேன்.
12.4.   அவர்களின் கற்பனைத் திறனை வளர்ப்பதற்கு பயிற்சிகள் அளிப்பேன்.
12.5.   அவர்கள் சொன்னதை மட்டும் செய்யாமல் புதுமையாக செயல்பட அவர்களுக்கு வேண்டிய துணிவை வளர்ப்பேன்.

13.     நான் அனைத்து மாணவர்களுக்கும் சமவாய்ப்பு அளிப்பேன்.  மாணவர்களிடம் சமத்துவ மனப்பாங்கை வளர்த்து, ஒருவருடன் ஒருவர் சகோதரத்துவத்துடன் பழகப் பயிற்றுவிப்பேன்.
13.1.   பயிற்சிகள் அளிக்கும் போது வகுப்பில் நன்றாகப் படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் எல்லோருக்கும் சம வாய்ப்பு அளிப்பேன்.
13.2.   மற்றும் மாணவர்களையும் மாணவிகளையும் சமமாக பாவித்து அவர்களுக்குச் சம வாய்ப்பு அளிப்பேன்.
13.3.   ஒருதலைப்பற்றைத் தவிர்த்து என் மாணவர் அனைவரையும் என் மகவுகள் போல் சமமாக பாவித்து வழி நடத்துவேன்.
13.4.   மாணவர்கள் சாதி மத வேறுபாடின்றி ஒருவரோடொருவர் நல்லிணக்கத்தோடு பழக ஊக்குவிப்பேன்.
13.5.   பெரிய குழந்தைகளுக்கு அவர்களை விடச் சிறிய குழந்தைகளை ஊக்குவிக்கவும், உதவவும், வழி நடத்தவும் சொல்லிக் கொடுத்து, அதை அவர்கள் செயலில் காட்ட வாய்ப்புகளை ஏற்படுத்துவேன்.
13.6.   பள்ளியில் மாணவர் மன்றம், அறிவியல் மன்றம், தமிழ் மன்றம், கணித மன்றம், மாதிரி பாராளுமன்றம் போன்றவற்றை அமைத்து மாணவர்களிடம் சமத்துவ மனப்பான்மையையும் குடியரசுக் குடிமைத் திறன்களையும் வளர்ப்பேன்.
13.7.   அவர்கள் குழு விளையாட்டில் ஈடுபட வாய்ப்புகள் ஏற்படுத்தி அவர்களின் ஒன்று சேர்ந்து செயல் படும் திறனை வளர்ப்பேன்.
13.8.   என் மாணவர்கள் சேர்ந்து செயல்பட கற்றுக்கொள்ளுவதற்கு வாய்ப்பளிக்கும் வகையில் சில பயிற்சிப் பணிகளைக் கூட்டுறவுப் பணிகளாக இடுவேன்.
13.9.   என் மாணவர்கள் பரஸ்பர உரையாடல், கூடி விவாதித்தல் போன்றவற்றின் மூலம் தங்களுக்குள் உள்ள கருத்து வேறுபாடுகளுக்குத் தீர்வுகாணவும், சேர்ந்து செயல்படவும் வாய்ப்புகள் ஏற்படுத்துவேன்.

14.     ஆசிரியராகிய நான் என் மாணவர்களை மனதில் கொண்டு எப்பொழுதும் என்னை அறிவிலும் திறன்களிலும் நற்பண்புகளிலும் வளர்த்துக் கொண்டே இருப்பேன்.
14.1.   “மனிதன் ஆயுள் முழுதும் கற்றுக்கொண்டே இருக்கவேண்டும்.
கற்க மறுப்பவன் வாழ மறுப்பவன் ஆகிறான்,”
என்னும் ஸ்ரீ இராமகிருஷ்ணரின் வாக்கு குறிப்பாக ஆசிரியர்களுக்கு மிகவுமே பொருந்தும் என்பதை என் மனத்தில் எப்போதும் நிறுத்திச் செயல்படுவேன்.
14.2.   அதிவேகத்தில் மாறிக்கொண்டே இருக்கும் இந்த யுகத்தில் ஒரு நல்லாசிரியர் தம்மைப் புதுப்பித்துக்கொண்டே இருக்கவேண்டும் என்பதை உணர்ந்து, பட்டத்திக்கும் பதவி உயர்வுக்கும் மட்டுமேயன்றி, அவ்வப்போது தானாகவே கிடைக்கும் கல்வி மற்றும் பயிற்சி வாய்ப்புகளை நன்கு பயன்படுத்தியும், நானே எனக்குத் தேவையான பயிற்சிகளைத் தேடிச் சென்றும், புத்தகங்களைப் பயின்றும் என் நேரத்தையும் பணத்தையும் சக்தியையும் நல்ல முறையில் செலவிட்டு என் அறிவையும் திறனையும் வளர்த்துக் கொண்டே இருப்பேன்.

----------------ooOoo----------------